9 மாவட்டங்களில் உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுக தேர்தலில்,22 வயது இளம்பெண் வெற்றி, பவுன்சர்கள் புடை சூழ காரில் அழைத்து வரப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், கஞ்சா வழக்கில் சிறையில் இருந்து கொண்டே வெற்றிபெற்ற பெண், அதிமுக ஆதரவுடன் திமுக வெற்றி, திமுகவினரிடையே மோதலால் அதிமுக வெற்றி என பல்வேறு சுவாரசியங்கள் அரங்கேறின.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வெண்மதி என்பவர், பவுன்சர்கள் பாதுகாப்போடு, ஒன்றிய கவுன்சிலர்களை அழைத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது.
ஆதரவாளர்கள், பவுன்சர்கள் புடை சூழ காரில் வைத்து ஒன்றியக் கவுன்சிலர்களை தேர்தலுக்காக நாட்றாம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அவர் அழைத்துச் சென்றார்.பின்னர், நாட்றாம்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு வெண்மதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.