கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் ஓட்டுநர் கனகராஜின் மரணம் குறித்து அவரது நண்பரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் மரணம் குறித்து மறு விசாரணை நடத்தப்படும் நிலையில், சேலம் ஆத்தூரில் அவரது நண்பர் சுரேஷிடம் விசாரிக்கபட்டது.
கடந்த 2017- ஆம் ஆண்டில் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த கனகராஜ், ஆத்தூர் அருகே சாலை விபத்தில் மரணமடைந்ததாக கூறப்பட்டது.
ஆனால், கனகராஜின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் தனபால், கூறியிருந்த நிலையில், மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.