மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-வை போல் சொல்லாற்றலும், செயலாற்றலும் தனக்கு இல்லை எனத் தெரிவித்த அவரது மகன் துரை வைகோ, தன்னால் முடிந்த வரை கட்சிக்கு உழைக்கத் தயாராக உள்ளதாக கூறினார்.
மதிமுக தலைமை கழக செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள துரை வைகோ, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அரசியலில் சவாலான பயணத்தை எதிர்நோக்கி உள்ளதாகத் தெரிவித்த துரை வைகோ, மதிமுக-வை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்ல நிர்வாகிகளும், தொண்டர்களும் இணைந்து பணியாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்.