கோவையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த கடைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
அவினாசி சாலையில் உள்ள ரோலிங் டோஃப் கஃபே என்ற ஐஸ்கிரீம் கடையில் மதுபானம் கலந்து ஐஸ்கிரீம் விற்கப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், ஐஸ்கிரீம் தயார் செய்யும் இடத்தில் 2 மதுபாட்டில்கள், காலாவதியான பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அந்த இடம் சுகாதாரமின்றி இருந்ததும், ஐஸ்கிரீம் தயாரிக்க பாதுகாப்பான தண்ணீர் பயன்படுத்தப்படவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அந்த ஐஸ்கிரீம் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.