தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு சரியான முறையில் சேவை செய்ய முடியவில்லை எனக் கூறி ஊராட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள தாமரைமொழி கிராம பஞ்சாயத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சைகளான சுயம்புக்கனி மற்றும் உமா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்று பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆறு மாதமாக இப்பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, ராஜினாமா கடிதங்களை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அவர்கள் சமர்பித்துள்ளனர்.