நடந்து முடிந்த 9 மாவட்டஙளுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 27ஆயிரத்து792 பிரதிநிதிகள் இன்று பதவியேற்கின்றனர்.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பதவியேற்கின்றனர். அத்துடன், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது.
பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தலில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.