தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவி ஏற்றுக் கொள்கின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற 27ஆயிரம் பேர் அந்தந்த அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முன்னிலையில் பதவி ஏற்கின்றனர்.இவர்கள் அனைவரும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.
இதை தொடர்ந்து 22ம் தேதி மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே மறைமுக தேர்தலில் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.