கொடைக்கானல் மலைப்பகுதியில் வருடம் ஒரு முறை மட்டுமே பூக்கும் மஞ்சள் நிற குருவி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. பார்ப்பதற்கு சிட்டு குருவி போல் தோற்றம் உடையதால் இவை குருவி பூ என அழைக்கப்படுகிறது.
இது மரத்தில் பூக்க கூடியதாகும். இயற்கையாகவே இறக்கையை விரித்து பறப்பது போல பூக்கின்றது. இப்பூவின் அடிபகுதியில் உள்ள அல்லி இதழை பிடித்து இழுக்கும் போது குருவி தன் தலையை ஆட்டுவதை போல இருப்பது இப்பூவின் விசேஷமாக கூறப்படுகிறது.
இவ்வகை மலர்கள் கொடைக்கானலில் உள்ள ரோஜா பூங்காவில் பூத்து குலுங்குகின்றன. பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் குருவிப் பூக்களை கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.