மிலாடி நபியை முன்னிட்டு வேலூர் சார்பனாமேடு பகுதியில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த 5 ஆயிரம் பேருக்கு காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆயிரத்து 200 கிலோ அரிசி மற்றும் கோழிக்கறி, ஆட்டிறைச்சி கொண்டு பிரியாணி சமைத்து பொதுமக்களுக்கு வழங்குவதை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை ஒட்டி ஆர்வத்துடன் வந்த மக்கள், நீண்ட வரிசையில் நின்று பிரியாணி வாங்கிச் சென்றனர்.