கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, கோதையாறு செல்லும் சாலையின் ஒரு பகுதி சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்ததால் பேச்சிப்பாறை அணையிலிருந்து அதிகபட்சமாக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
அதையொட்டி, அணை நீர் செல்லும் பாதையான பேச்சிப்பாறையிலிருந்து மலையோர கிராமமான கோதையாறு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இதனால், கோதையாறு, குற்றியாறு, தச்சமலை உள்ளிட்ட மலையோர கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.