தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் நாளை பதவியேற்க உள்ளனர்.
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலும், 28 மாவட்டங்களில் விடுபட்ட இடங்களுக்கான தற்செயல் தேர்தலும் நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் கடந்த 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு நாளை பதவியேற்பு நிகழ்ச்சியும், வரும் 22-ஆம் தேதி மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றிய குழுத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தலும் நடைபெறவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பதவியேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.