மின்தடை என்பது எதிர்கட்சிகள் பரப்பும் விஷமப் பிரசாரம் எனவும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் பார்த்திவபுரத்தில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்து மின்சார இயக்கத்தை துவக்கி வைத்து பேசிய அவர், குமரியில் தற்போது ஏறத்தாழ 75லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மின்சார வாரியத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.