கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் நபர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
உதகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், நீலகிரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்ட நிலையில் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள 84 ஆயிரம் நபர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படுவதாகவும் ஆட்சியர் குறிப்பிட்டார்.