1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை போக்க, வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் ''இல்லம் தேடி கல்வி'' என்ற திட்டத்திற்கான விழிப்புணர்வு பயணத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்க நடப்பாண்டு பட்ஜெட்டில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கிடக்கும் சூழலில் 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளி மாணவர்களிடையே நிலவும் கற்றல் குறைபாடுகளை சரிசெய்ய தினமும் 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு "இல்லம் தேடி கல்வி" என்கிற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காலையில் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், திட்டத்திற்கான விழிப்புணர்வு பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.