தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனது ஆண் நண்பரை ஏவிவிட்டு, கணவரைக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார். சின்ன கோவிலாங்குளத்தைச் சேர்ந்த உமா என்ற அந்தப் பெண்ணின் கணவர் இளங்கோ, சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க ஊருக்கு வந்த இளங்கோ, திடீரென மாயமானார். ஊத்துமலை அருகே காயங்களுடன் அவரது சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில் அவரது மனைவி உமாவுக்கு சங்கரன்கோவிலைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவனோடு தவறான உறவு இருந்துள்ளது.
அதுகுறித்து தெரியவந்து இளங்கோ மனைவியை கண்டிக்கவே, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் உமா. அதன்படி முத்துக்குமாரும் அவனது தம்பி சீனிவாசனும் சேர்ந்து இளங்கோவை கொலை செய்துள்ளனர் எனக் கூறும் போலீசார், மூவரையும் கைது செய்தனர்.