ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை போக்க, வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பாண்டில் பட்ஜெட்டில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கிடக்கும் சூழலில் 1 முதல் 8ம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே நிலவும் கற்றல் குறைபாடுகளை சரிசெய்ய தினமும் 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு "இல்லம் தேடி கல்வி" என்கிற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.