பெரும் சவால்கள், போராட்டங்கள், பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களுக்கு இடையே டி23 புலி உயிருடன் பிடிக்கப்பட்டதாக முதுமலை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புலியை சுட்டு வீழ்த்துவது குறித்து துறைக்கு எந்த யோசனையும் இல்லை என்றும் அதை உயிருடன் பிடிக்க மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தவிர்க்க முடியாத போது மட்டுமே புலியை சுடுவது கடைசி விருப்பமாக இருந்தது என குறிப்பிட்டுள்ள அவர், நீதிமன்றத் தீர்ப்பு அந்த விருப்பத் தேர்வையையும் மூடிவிட்டதாகக் கூறியுள்ளார். சாதகமற்ற நிலப்பரப்பு, பாதகமான காலநிலை போன்றவை புலியைத் தேடும் பணியை கடினமாக்கியதாகவும் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார்.