நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் மகன் தேசிய அளவில் நடைபெறும் சிலம்பாட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான ஜெயக்குமார் ஊதுபத்தி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மகன் ஸ்ரீ பிரகாஷ், சிலம்பாட்டத்தில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் தங்கப் பதக்கங்களை வாங்கியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்டப் போட்டிக்குத் தேர்வான ஸ்ரீ பிரகாஷ், வறுமை காரணமாக அங்கு செல்ல வழியின்றி அந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில் வரும் 20ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ள சிலம்பாட்டப் போட்டியில் ஸ்ரீ பிரகாஷ் பங்கேற்கச் செல்கிறார்.