சென்னையில் இருந்து சைக்கிளிங் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம் மற்றும் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். கோப்புகள் சரியாக உள்ளனவா, உரிய விதிமுறைகள் படி எஃப்.ஐ.ஆர் பதியப்படுகிறதா உள்ளிட்ட சோதனைகளை அவர் செய்தார்.
பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்தும் காவலர்களின் பணியிட மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் டிஜிபி சைலேந்திரபாபு கேட்டறிந்தார். பிறகு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த பெண் காவலர்களிடம் பேசினார். இதனைத்தொடர்ந்து காவலர் குடியிருப்பில் உள்ள சிறுவர் சிறுமிகளின் சிலம்பாட்டத்தை பார்த்து அவர்களுக்கு ஊக்கப்பரிசு அளித்தார்.