கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே வெள்ளநீரில் பெண் ஒருவர் அடித்து செல்லப்பட்டார். தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பேரூர் தென்கரை கிராமத்து பாளையம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த விஜயா என்ற பெண் தோட்ட வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது பள்ளத்தில் வந்த மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் விஜயாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.