முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மருத்துவர் ஷர்மிளா ஆகியோர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.
புகார் அளிக்கப்பட்ட 10 மணிநேரத்தில் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.