ஈரோடு மாவட்டம் பர்கூர் கிழக்கு மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஈரெட்டி, கடையஈரெட்டி, மின்தாங்கி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நேற்று மாலை மிக அதிக கனமழை பெய்ததன் காரணமாக,வனப்பகுதியை ஒட்டியுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
செலம்பூர்அம்மன் கோவில் மற்றும் குரும்பபாளையம் மேடு பகுதியில் உள்ள தரைப்பாளங்களை வெள்ள நீர் மூழ்கடித்தபடி சென்றது. அருகே உள்ள விவசாய நிலத்திற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.