கள்ளக்குறிச்சி அருகே ஊராட்சி செயலர் கொலை மிரட்டல் விடுவது போன்ற ஆடியோ வெளியாகி, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்ன சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவடி- பூசப்பாடி ஊராட்சி மன்றத் தலைவராக சாந்தி சேகர் என்பவர் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு ஆதரவாக ஊராட்சி செயலர் ராஜா என்பவர் தேர்தல் பணியாற்றினார் என்று கூறப்படுகிறது.
அதுகுறித்து எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள் துறை மேலிடத்துக்கு புகார் அளிக்க உள்ளனர் என சிலர் அவரிடம் கூறியுள்ளார். அப்படி தன் மீது புகாரளித்தால், எதிர்வினை கடுமையாக இருக்கும் என மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில் இருப்பது தன் குரல் அல்ல என ஊராட்சிச் செயலாளர் இராஜா மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து சின்ன சேலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.