நீலகிரியில் பிடிபட்ட டி23 புலியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதாகவும் மயக்க மருந்தின் பாதிப்பிலிருந்து புலி மெல்ல மெல்ல மீண்டு வருவதாகவும் மைசூரு புலிகள் மறுவாழ்வு இல்ல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் 21 நாட்களாக சுற்றித் திரிந்த டி23 புலி கடந்த வெள்ளிக்கிழமை 3 மயக்க ஊசிகளுக்குப் பிறகு பிடிக்கப்பட்டு, மைசூரு புலிகள் மறுவாழ்வு இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
புலிக்கு தற்போது பசியும் சோம்பலும் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், கோழி உள்ளிட்ட உணவுகளைக் கொடுத்து சிகிச்சை அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
புலியின் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளதாகவும் அடிவயிற்றில் புழுத்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கூறும் மருத்துவர்கள், காயங்களை சுத்தம் செய்து நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.