மயிலாடுதுறை அருகே கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி ஆயிரம் ஏக்கரில் புதிதாக நட்ட நெற்பயிர்கள் அழுகிப் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை, சேத்தூர், மேலாநல்லூர் ஆகிய ஊர்களில் ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் இரண்டாயிரம் ஏக்கரில் நடவுக்காக வயலை உழுது சமப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் கன மழையால் வயலில் நீர் தேங்கியதில் நட்டு 10 நாட்களே ஆன நாற்றுகள் அழுகிப் போயின. கால்வாய்களைத் தூர் வாராமல் இருப்பதே மழைநீர் வடியாமல் தேங்கியதற்குக் காரணம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.