கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கோதையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கன்னியாகுமரியில் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் மழையால், பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணையில் இருந்து அதிகளவில் உபரி நீர் வெளியேற்றபடுகிறது.
அதையொட்டி, திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து தடுப்பு வேலியை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது.இதனால் தாமிரபரணி, பரளியாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.