செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

21 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் பிடிக்கப்பட்ட T-23 புலி..!

Oct 15, 2021 09:56:53 PM

நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலியான T-23 புலி 21 நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு வனத்துறையிடம் சிக்கியுள்ளது. 2முறை மயக்க ஊசி செலுத்தியும் பிடிபடாத புலி, மூன்றாவதாக செலுத்தப்பட்ட ஊசியில் மயங்கிய நிலையில், உயிருடன் பிடிபட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தும் போது அடையாளத்துக்காக புலிகளுக்கு எண்கள் கொடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் முதுமலை புலிகள் காப்பத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள புலிகளில் 13 வயதுடையை புலி ஒன்றுக்கு T23 என அடையாள எண் கொடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் இந்த டி23 புலி தாக்கி அடுத்தடுத்து 4 பேர் இறந்தனர். 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் புலி அடித்துக் கொன்றது. புலியை துப்பாக்கியால் சுட்டு உடனடியாக  பிடிக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இதனையடுத்து புலியை சுட்டுப் பிடிக்க வனத்துறையினர் முடிவெடுத்தனர். அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. புலியை சுடக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் காட்டுப் பகுதியில் தீவிரமாக களமிறங்கினர்.

நூற்றுக்கணக்கான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நீண்ட தேடுதலுக்கு பின்னர் வியாழக்கிழமை இரவு தெப்பக்காடு பகுதியிலிருந்து இருந்து மசினகுடி செல்லும் சாலையில் T23 நடந்து வந்ததை வனத்துறையினர் உறுதி செய்தனர். கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் இரவு 8 மணி அளவில் புலிக்கு இரண்டு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் புலி அடர்ந்த புதருக்குள் சென்று மறைந்தது. இதனால் 2 கும்கி யானைகள் உதவியுடன், வேட்டை தடுப்பு காவலர்கள் மசினகுடி பகுதியில் இரவு முழுவதும் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

21ஆவது நாளான இன்று காலை புலி நடமாட்டம் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கிராம மக்கள் செல்லக் கூடாது எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அவர்களது தொடர் கண்காணிப்பில் டி23 புலி, கூட்டப்பாறை பகுதியிலுள்ள புதர் ஒன்றில் மறைந்திருந்தது தெரியவந்தது. புதரை சுற்றிவளைத்து மறைந்து நின்ற வனத்துறையினர், புலி வெளியே வரும் நேரம் பார்த்து, 3ஆவது மயக்க ஊசியை செலுத்தினர். ஏற்கனவே செலுத்தப்பட்ட மயக்க ஊசியால் சோர்ந்து காணப்பட்ட புலி, மூன்றாவது ஊசிக்கு மயங்கிய நிலையில், உயிருடன் பிடிபட்டது. 

புலியை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் புலியைப் போன்று ஏற்கனவே 3 ஆட்கொல்லிப் புலிகளை பிடிக்கும் முயற்சியில் 3 புலிகளுமே துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான நிலையில், உயிருடன் பிடிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிடிபட்ட புலி லாரியில் ஏற்றப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிகிச்சைக்குப் பின் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு முதுமலை வனப்பகுதியில் விடப்படுமா அல்லது வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்று பராமரிக்கப்படுமா என எதிர்பார்த்திருந்த நிலையில் உடல்நிலை கருதி புலியானது மைசூரில் உள்ள வனவிலங்கு மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


Advertisement
திருப்பத்தூர் அருகே மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட தந்தை, மகன் கைது
ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்
லிப்ட் வெல்லில் மோட்டார் பொருத்த பாதாள சாக்கடையின் உள்ளே கயிறு கட்டி இறக்கப்பட்ட ஊழியர்
நீர்நிலை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி அலுவலகம் காட்டியதால் இடிக்கப்பட்டது...
வாகன தணிக்கையின் போது தலைமறைவாக இருந்த ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி கைது
ஆளில்லாத வீடுகளில் பூட்டை உடைத்துத் திருட்டு... முகமூடித் திருடன் குறித்து போலீஸ் விசாரணை
பிடிவாரண்ட் பிறபிக்கப்பட்டு தேடப்பட்ட 2 ரவுடிகள் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கைது
சொத்து நகல் கிடைக்க தாமதம் ஆனதால் மாவட்டப் பதிவாளர் அலுவலகக் கதவைப் பூட்டிப் போராட்டம்
99 முறை பைபர் கேபிள் திருடனுக்கு வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் பேனர்
சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்த துணிக்கடை உரிமையாளர் கைது

Advertisement
Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!


Advertisement