ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கச் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட நாட்களாகச் சிறையில் உள்ள கைதிகள் 700 பேரை விடுதலை செய்வதற்காக, தகுதியானவர்களைப் பட்டியலிடச் சிறைச் சாலைகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
எழுவர் விடுதலை குறித்துக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.