தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே தலையாமங்கலம் கிராமத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
குறுவை அறுவடை பணிகள் முடிந்து, தாளடி சாகுபடிக்காக வயல்வெளிகளை சீர்செய்யும் பணிகளில் விவசாயி ஜெயராமன் ஈடுபட்டிருந்தார்.
டெல்டா மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், வயலில் தாழ்வாக சென்ற மின் கம்பி அறுந்து விழுந்தது கிடந்தது தெரியாமல் அதை ஜெயராமன் மிதித்ததில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.