இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்ட போதும் T23 புலி தப்பி ஓடியதால் 21-வது நாளாக தேடும் பணி தொடர்கிறது.
நேற்றிரவு தெப்பக்காடு பகுதியிலிருந்து இருந்து மசினகுடி செல்லும் சாலையில் T23 புலி நடந்து வந்ததை உறுதி செய்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் 2 முறை மயக்க ஊசி செலுத்தினர். எனினும் புலி தப்பியோடியது.
இதனால், 2 கும்கி யானைகள் உதவியுடன், வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறையினர் மசினகுடி பகுதியில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போஸ்பரா, கார்குடி பகுதியிலிருந்து மீண்டும் மசினகுடி பகுதிக்கு T23 புலி இடம்பெயர்ந்து உள்ளதால் மசினகுடி, சிங்காரா, வாழைத்தோட்டம், பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் வனப்பகுதிக்கு செல்லக் கூடாது எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.