கடலூரில் அறிஞர் அண்ணா மேம்பாலத்தை ஒட்டிச்செல்லும் குடிநீர் குழாய் சேதமடைந்து உள்ளதால் குடிநீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கேப்பர் மலைப்பகுதியிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் புதுப்பாளையம், வன்னாரப்பாளையம், தேவனாம்பட்டினம், அண்ணா நகர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
அண்ணா பாலத்தின் வழியாகச் செல்லும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்ட நிலையில், அதனை ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.