செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஊரக உள்ளாட்சித் தேர்தல் திமுக அமோக வெற்றி

Oct 14, 2021 10:55:23 AM

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 9 மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவிகளையும் திமுகவே கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. 

9 மாவட்டங்களில் மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 138 இடங்களில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு இடங்களில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்கள் வசமாக்கியுள்ளன.

எஞ்சிய செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் தலா ஒரு இடத்தில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், தேர்தல் நடந்த 9 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியையும் திமுகவே கைப்பற்றுகிறது.

அதேபோன்று, ஒன்றிய கவுன்சிலருக்கான பதவியிடங்களில் மொத்தமுள்ள 74 ஒன்றியங்களில் 73 ஒன்றியங்களை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியுள்ளன.

காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் திமுக கூட்டணி வென்றுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் திமுக வெற்றி வாகை சூடியுள்ள நிலையில், திருப்போரூர் ஒன்றியத்தில் மட்டும் இழுபறி நீடிக்கிறது. இதுவரை வெளியான முடிவுகளின் படி மொத்தம் உள்ள 1381 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளன.

அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு 200க்கும் மேற்பட்ட ஒன்றிய வார்டுகள் மட்டுமே கிடைத்தன. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக, 47 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை வென்று மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

அமமுக நான்கு இடங்களையும், தேமுதிக ஒரு இடத்தையும் வென்ற நிலையில், நாம் தமிழர் கட்சி ஒரு ஒன்றிய கவுன்சிலர் இடத்தில் கூட வெல்லவில்லை.


Advertisement
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
15 இரும்பு சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் உண்ட பள்ளி மாணவன்
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
காரைக்குடி விமான நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்
நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு
ஆற்றில் நீரெடுக்கும் தண்ணீர் தொட்டியில் உறங்கும் முதலை... முதலையைப் பிடித்து செல்ல வனத்துறையிடம் கோரிக்கை
மண்டல அளவிலான உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வு கூட்டம்
நடிகை சீதா வீட்டில் நகை திருடு போன விவகாரம் குறித்து போலீசார் விசாரணை

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement