நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதா, சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதிய ஆளுநராக ஆர். என் ரவி பதவியேற்ற பின் நீட் விலக்கு மசோதா குறித்து முதன் முறையாக முதலமைச்சர், ஆளுநரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் பொழுது, நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விளக்கம் பெறப்பட்டதாகவும், மேலும், கொரோனா தொற்று தாக்கம் குறித்தும், தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.