ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பாமக பெற்றுள்ள வெற்றி கவுரவமானது; மரியாதைக்குரியது என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 47க்கு மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளைப் பாமக கைப்பற்றியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். பாமக சார்பில் போட்டியிட்ட, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பா.ம.கவின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
பாமக தனித்துப் போட்டியிட்டு திமுக, அதிமுக ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைக் கைப்பற்றித் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.