நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா தொடர்பாக ஆளுநர் ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலை 5 மணிக்கு ஆளுநர் ரவியைச் சந்திக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த ஏதுவாகத் தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கோரிக்கை விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத் தக்கது.