செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

குழந்தையுடன் காத்திருந்த வேட்பாளரின் கணவர் - அடைக்கலம் கொடுத்த போலீசார் 

Oct 13, 2021 01:19:46 PM

திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அதிமுக பெண் வேட்பாளர் ஒருவர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதற்காக, தனது குழந்தையை கணவரிடம் விட்டுச்சென்றார். கொட்டும் மழையில் மனைவியின் வெற்றிக்காக குழந்தையுடன் காத்திருந்த கணவருக்கு போலீசார் அடைக்கலம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பிருந்தே வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் குவிந்திருந்தனர். வெற்றி பெற்ற வேட்பாளர்களை அவரது ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் அள்ளித் தூக்கி மாலை அணிவித்து கொண்டாடினர்.

இந்த நிலையில், கூட்டத்தில் 6 மாத கைக்குழந்தையுடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முன்பு காத்திருந்த நபரொருவர் திடீரென மழை பெய்ய தொடங்கியதால் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள காவல் துறையின் பாதுகாப்பு கூடாரத்திற்கு ஓடிவந்தார். கையில் குழந்தையுடன் மழையில் நனைந்தபடி இங்கு வரவேண்டுமா ? என காவல்துறையினர் கேள்வி எழுப்ப, அவர் தனது மனைவி ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடுவதாகவும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருப்பதாகவும் குழந்தை அழுவதால் அவரை பார்க்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதற்கான அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என கூறிய காவல்துறையினர், பச்சிளம் குழந்தை என்பதால் குழந்தையின் தாயாரை அழைத்து வருவதற்காக, பெண் காவலர் ஒருவர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குச் சென்றார். சிறிது நேரத்தில் குழந்தையின் தாய் அங்கு விரைந்து வந்தார். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 5-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றியுடன் திரும்பிய அந்த பெண் அதிமுக வேட்பாளரான அபிராமி.

குழந்தையை கையில் எடுத்துக் கொஞ்சிய தாயிடம், இது போன்ற இடங்களுக்கு கைகுழந்தையை தூக்கி வருவது நோய்பரவலுக்கு வழிவகுக்கும் என்று போலீசார் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

 

 

 

 


Advertisement
"வியாபாரம் செய்ய விடாமல் விரட்டுகிறார்கள்; வேறு வாழ்வாதாரம் இல்லை"... திருச்செந்தூர் கோவில் சிறு வியாரிகள் கோட்டாட்சியரிடம் புகார்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே மழையால் நிரம்பி வழியும் ஏரி... சாலையை துண்டித்து ஏரியின் உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை
தளவாய்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவீன ஆய்வகம் திறப்பு... காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்
நெல்லை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் கைத்துப்பாக்கி திருட்டு... கைத்துப்பாக்கி, தோட்டாக்களை திருடிய 6 பேர் கைது
நிதி நிறுவன அதிபருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை..
பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் வெட்டி படுகொலை செய்த சம்பவம்.. போலீசார் விசாரணை..
ராசிபுரத்தில் பள்ளி மாணவன் ஓட்டிய பைக்கை பறிமுதல் செய்து அபராதம் விதித்த ஆட்சியர்..
சலூன் கடை ஊழியரை தாக்கிவிட்டு தலைமறைவான வி.சி.க. பிரமுகர் கைது..
1 வாரத்திற்கும் மேலாக கழிவு நீருடன் தேங்கியுள்ள மழை நீர்..பொதுமக்கள் கடும் சிரமம்..
விவாகரத்து பெற்ற மனைவிக்கு ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு.. ரூ.80,000-த்தை நாணயங்களாக கொடுத்த கணவன்..

Advertisement
Posted Dec 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சப்புன்னு அறைவேன்.. ராசா.. சப்.. சப்புன்னு அறைவேன்.. கோவக்கார போலீசுக்கு ஷாக்..! தலைக்கவசம் போடலைன்னு அடிச்சா எப்புடி ?

Posted Dec 18, 2024 in தமிழ்நாடு,Big Stories,

40 சவரன் - 2 கிலோ வெள்ளி வீடு வீடாய் கொள்ளையடித்த அமாவாசை பிசினஸ் மேக்னட் ..! கோவிலில் கும்பிட்டு கைவரிசை

Posted Dec 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பை.. பைக்குள்ள பை.. எத்தனை பை..? திருட்டு சுந்தரியை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த பெண் பயணிகள்..! அரசு பேருந்தில் தரமான சம்பவம்

Posted Dec 17, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ரெட்டை நாக்கு.. நீல கண்கள்.. உடலெல்லாம் விசித்திர டாட்டூ.. இன்ஸ்டா ஏலியன் சிக்கியது எப்படி ? மனித உடலில் மாடிபிகேசனாம்..!

Posted Dec 17, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆசையோடு ஆபீஸ் போனாப்பா.. சாலையில் கிடந்த மண்ணால்... தலை நசுங்கி சிதைந்த கொடுமை..! அடுத்தடுத்த உயிர் பலி - கலெக்டர் எச்சரிக்கை


Advertisement