முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூப்பர் சாட்டை துரைமுருகன் மீது, தருமபுரி எம்.பி. செந்தில்குமாரும் புகாரளித்துள்ளார்.
குழந்தைகள் மற்றும் பெண்களை தவறாக சித்தரித்தும், கலைஞர் கருணாநிதியின் சிலையை கேலி செய்யும் வகையிலும் யூடியூப்பில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்துள்ளதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து தவறான கருத்துக்களை பரப்புவதாகவும் அவரது புகாரில் கூறப்பட்டுள்ளது.
ஆகையால், சாட்டை துரைமுருகன் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து அந்த யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேனல்களை உடனடியாக முடக்க நடவடிக்கை வேண்டும் எனவும் எம்.பி. செந்தில் குமார் வலியுறுத்தியுள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.