சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் மகளுடன் ஏற்பட்ட சண்டையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டார்.
சத்தியமூர்த்தி நகர் காவல் குடியிருப்பில் வசித்து வரும் சாய்குமார் என்பவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3ம் அணியில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து குடும்பத்துடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
அதிகமான குடிபோதையில் வீட்டுக்கு வந்த சாய்குமார் குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அவரது மகள் ,சாய்சொரூபா தந்தையை கண்டித்ததால் சாய்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது வயிற்றில் சரமாரியாக குத்திக் கொண்டார். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.