கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.
இதற்காக சென்னையில் 2 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 50 மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் 17 அரங்குகள் அமைக்கப்பட்டு 20க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.
பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சளி பரிசோதனை, மலம் பரிசோதனை, கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்படும். முதலமைச்சரின் காப்பீடு திட்டத்துக்கான அட்டைகளும் முகாம்களில் வழங்கப்படவிருக்கின்றன.