ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நாளை செவ்வாய்கிழமை வெளியிடப்பட உள்ளன. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், முடிவுகளை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தினார்.
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி., கேமரா மற்றும் போதிய மேசைகள் உள்ளதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். தேர்தல் முடிவுகளை காலை 8 மணி முதல் தங்கள் இணையதளத்தில் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.