தமிழகத்தின் எல்லையோர மாவட்டதங்களில், ரேஷன் பொருட்கள் மற்றும் அரிசி கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்தினார்.