சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு மதுரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை சத்திய சாய் நகரில் நடைபெற்ற கேபிள் டிவி தொழிலாளர்கள் பாதுகாப்பு கூட்டத்தில், அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சமூக விரோதிகள் சிலரால் மிரட்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும், காவல்துறை அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.