திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் குறிப்பிட்ட ஒரு தரப்பை விதிகளை மீறி அனுமதித்ததாக எழுந்த புகாரில், தேர்தல் நடத்தும் அலுவலர், 3 காவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நிறைவுற்று, வாக்குப்பெட்டிகள் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அந்த அறைக்குள் குறிப்பிட்ட ஒரு தரப்பினர் நுழைந்து வாக்குப்பெட்டிகளை மாற்றி வைத்ததாக மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த பிளாஸ்டிக் சேர்களை அடித்து நொறுக்கி சூறையாடிய அவர்கள், அதிகாரிகளைக் கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.