ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், துரைபெரும்பாக்கம் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
தொடர் மழை மற்றும் ஆந்திராவின் கலவகுண்டா அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் காவேரிப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
அதன்காரணமாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், துரைபெரும்பாக்கம் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.