திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் வாக்குச்சாவடி மையத்துக்குள் புகுந்து ஒரு தரப்பினர் வாக்குப் பெட்டிகளை மாற்றியதாக வாக்குவாதம் செய்த எதிர் தரப்பினர், அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.
ஆலங்காயம் ஆண்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பு அறையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்து வாக்குப்பெட்டிகளை ஒரு தரப்பினர் மாற்றி வைத்ததாக மற்றொரு தரப்பினர் குற்றம்சாட்டி, அதிகாரிகளை சிறைபிடித்தனர்.
அங்கிருந்த போலீசார், அதிகாரிகளை மீட்டு தனியறையில் பாதுகாப்பாக தங்கவைத்தனர். ஆத்திரத்தில் இருந்த எதிர்தரப்பினர், அங்கிருந்த பிளாஸ்டிக் சேர்கள், இரும்பு வேலிகள் உள்ளிட்டவற்றை அடித்து, உடைத்து சூறையாடினர்.தொடர்ந்து எதிர் தரப்பினர் பள்ளி எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.