விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நாயிடம் 2 ஆட்டுக்குட்டிகள் பால் குடித்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமலைபுரம் கிராமத்தில் விவசாயி முத்து விஜயன் என்பவர் நாய், ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது வீட்டில் நாயும் குட்டிகளை ஈன்று பால் கொடுத்து வரும் நிலையில் அவர் வளர்ப்பதற்காக வாங்கி வந்த ஆட்டுக்குட்டிகளுக்கும், நன்றியுள்ள விலங்கு என சொல்லப்படும் நாய் பாலூட்டி வருகிறது.
தாய்மையின் பேரன்பை, இந்த காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.