திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலர் மீது 3 தலைமை ஆசிரியைகள் பாலியல் புகார் அளித்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
வேடசந்தூர் வட்டார கல்வி அலுவர் அருண், தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக மூன்று தலைமை ஆசிரியைகள் வேடசந்தூர் கல்வி மாவட்ட அதிகாரியிடமும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும் புகார் கொடுத்தனர்.
வட்டார கல்வி அலுவலர் அருணிடம் விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி, சம்பவம் நடைபெற்றது உண்மை என அறிந்து அவரை துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.