நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் T23 புலியை பிடிக்கும் பணியில்14-வது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வனப்பகுதிக்குள் நான்கு இடங்களில் அமைக்கப்பட்ட பரண்களின் மீது கால்நடை மருத்துவர்கள் அமர்ந்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் புலி இருந்த சிங்காரா பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதியில் வேறு புலிகளின் கால் தடங்கள் தான் இருப்பதாகவும், டி23 புலியின் கால்தடம் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.