ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி கூடங்குளம் முதல் இரண்டு அலகுகளின் அணுக் கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்பி வைக்கவும், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் கழிவுகள் சேமிப்பு கிடங்கு அமைக்க அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தால் தரப்பட்ட அனுமதியை ரத்து செய்யுமாறும் திமுக வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதத்தில், கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட அணுமின் நிலையங்களில் பயன்பாடு முடிந்த அணுஉலை எரிபொருள் கழிவுகளை பத்திரமாக பாதுகாக்க நிரந்தர நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு உருவாக்கப் பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு மக்கள் வசிக்காத நிலப்பகுதியில் கட்டப்படவேண்டும் என்றும், இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.