மண்டபம் - பாம்பன் இடையே கடலில் இந்தியாவின் முதல் செங்குத்தான தூக்குப் பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் படங்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
1914ஆம் ஆண்டு கட்டப்பட்டு இப்போது பயன்பாட்டில் உள்ள ரயில்வே பாலத்தின் நடுப்பகுதியில் சிறிய கப்பல்கள் செல்வதற்காகப் பாலம் இரண்டாகப் பிளந்து இருபுறமும் மேலிழுத்துக் கொள்ளும் வகையில் உள்ளது.
அதன் அருகே 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டைத் தடங்கொண்ட புதிய பாலம் கட்டுவதற்கு 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பழைய பாலத்தைவிட 3 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் இந்தப் பாலத்துக்காகக் கடலில் 101 தூண்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளது.
நடுவே 63 மீட்டர் நீளங்கொண்ட செங்குத்துத் தூக்குப் பாலம் அமைக்கப்பட உள்ளது. 2 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தின் பணிகள் 2022 மார்ச் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.